கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது உண்மை: போப் பிரான்சிஸ்

மதகுருமார்கள் மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது உண்மைதான் என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சில மதகுருமார்கள் மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க வாடிகன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போப் குறிப்பிட்டார். வாடிக்கனில் இருந்து வெளியாகும் பெண்களுக்கான நாளிதழ் ஒன்று, பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொள்வதாகவும் அதைத் தொடர்ந்து கட்டாயக் கருகலைப்புக்கு உட்படுத்துவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், போப்பின் கருத்து அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version