சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவரது வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமி, அப்போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மீது கற்பழிப்பு, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். மற்றொரு குற்றவாளி ஜெய்சங்கருக்கு 10 ஆண்டு சிறையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 2006 – 2011 ஆம் ஆண்டுகளில், ராஜ்குமார் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.