பாலியல் குற்றச்சாட்டு – பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடைநீக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ். இவர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறியதையடுத்து, இது தொடர்பாக கமிட்டி விசாரணை நடத்தியது. கோவிந்தராஜ் மீதான பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக கமிட்டி தெரிவித்ததையடுத்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சிண்டிகேட் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை சார்ந்து கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version