கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனர் மற்றும் மூத்த மகன் மீது பாலியல் புகார்

சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனர் மற்றும் அவரது மூத்த மகன் மீது இளைய மருமகள் பாலியல் புகார் அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிறுவனரான பெருமாள் மற்றும் பள்ளியை நிர்வகித்து வரும் அவரது மூத்த மகன் பாலமுருகன் மீது, இளைய மருகமள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். பள்ளியில் பயிலும் மாணவிகள், ஆசிரியைகள், பெண் ஊழியர்களுக்கு இருவரும் பாலியல் தொல்லை அளித்ததாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கணவர் மறைவுக்கு பிறகு இருவரும் தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version