இந்திய வேகப்பந்து வீச்சாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மீது வரதட்சனை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது தாய் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மனைவி ஹாசின் ஜஹான் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதில் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் முகமது சமி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த ஒரு மாதத்தில் நடைபெறும் என கொல்கத்தா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version