தேனியில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூக்காரத் தெருவைச் சேர்ந்த மதுரை வீரன் என்பவர், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை வீரனை, போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை, தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளி மதுரை வீரனுக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளும், கொலை மிரட்டல் பிரிவுக்கு கீழ் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மேலும் குற்றவாளிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து, குற்றவாளி மதுரை வீரன் தேனி மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.