பாலியல் வழக்கிலிருந்து சசிகலா புஷ்பாவை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, மற்றும் சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலா புஷ்பா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைக்கக்கோரியும், முன்ஜாமின் கோரியும் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, அப்துல் நசீர் அடங்கிய அமர்வு, சசிகலா புஷ்பாவை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் சுகந்தியை தாக்கியது தொடர்பான வழக்கையும் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.