திருநெல்வேலி அருகே, கடையநல்லூர் மலை அடிவாரப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் கால்நடைகள், நீரின்றி தவிக்கின்றன.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளில், இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் குளம், குட்டைகள் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில், கால்நடைகள் நீர் இல்லாமல் தவித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஆடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டுசெல்ல சவாலாக இருப்பதாகவும், கால்நடைகளுக்கு தேவையான புற்கள், மற்றும் உணவுகள் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், வெயிலின் தாக்கத்தால் சில கால்நடைகள் இறந்துவிட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.