நெல்லையில் அதிகம் பயிரிடப்படும் சோவை நாத்து

நெல்லை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு உணவாகும் சோவை நாத்து விவசாயம் சிறப்பாக இருப்பதால், நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், குளம், கால்வாய், கிணறு போன்றவற்றில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும், சோவை நாத்துக்கள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன. இவற்றை குறைவான மூலதனத்தில் பயிரிட முடியும் என்பதால், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சோவையை சாப்பிடுவதால் கால்நடைகள், அதிக அளவில் பால் கொடுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சோவை நாத்துக்கான விதையை, தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version