வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில்  கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது…

டெல்லி, ராஜஸ்தான்,  ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும்  குளிர் நிலவி வருகிறது.  சாலை முழுவதும் பனி மூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்கை  எரியவிட்டபடி செல்கின்றனர். தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில்  தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஸ்ரீநகரில்  குறைந்தபட்சமாக  மைனஸ் 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.  கடும் பனிப்பொழிவு காரணமாக தால் ஏரி உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் உறைந்து காணப்பட்டது.  ராஜஸ்தானில் கடந்த 50 ஆண்டுகளுக்குப்பிறகு குறைந்த பட்சமாக 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இமாச்சல பிரதேசத்தில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version