விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 7 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. திண்டிவனம் அருகே ஜக்காம் பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் காப்பீட்டு அலுவலகம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு லேப்டாப், செல்போன் கொள்ளை அடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையிர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனிடையே, கல்குவாரி பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 7 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இதில் அவர்கள் 7 பேரும் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், கொள்ளை போன பொருட்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.