7 பேர் விடுதலை: மத்திய அரசு வழக்கறிஞர் பேச்சுக்கு அமைச்சர் சிவி சண்முகம் கண்டனம்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, மாநில அரசின் அதிகாரத்துக்கு எதிராக மத்திய அரசின் வழக்கறிஞர் பேசியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், 7 பேர் விடுதலை விவகாரத்தில், மாநில அரசின் அதிகாரத்துக்கு எதிராக மத்திய அரசின் வழக்கறிஞர் பேசியிருப்பதாக கண்டனம் தெரிவித்ததோடு, பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதில் முழு அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version