ஸ்பெயினில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி தீ பற்றியதில் இரு விமானத்தில் சென்ற 7 பேர் உடல் கருகி பலியாகினர்.
மஜோர்கா தீவிற்கு தொழிலதிபர் ஆகஸ்ட் இன்செல்கம்மர் ஜூனியர் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் 3 பேருடன் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். அப்போது நடுவானில் இரண்டு பேர் அமரக்கூடிய சிறிய ரக விமானம் எதிர்திசையில் வந்துள்ளது. எதிர்பாரதவிதமாக இந்த 2 விமானங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு விமானங்களும் தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இதில் இரு விமானங்களிலும் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேர் உடல் கருகி பலியாகினர்.இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பலேரீக் பிராந்திய அரசு, அங்கு 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.