சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு ஆறுகள், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளுக்கு 7 கோடியே 65 லட்ச ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளிலும் அவற்றின் முகத்துவாரங்களிலும், பக்கிங்காம், ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்களிலும் திடக்கழிவுகள் தேங்குவதால் மழைக்காலத்தில் வெள்ளநீர் வடியாமல் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் வடகிழக்குப் பருவமழைக்காலத்தை முன்னிட்டு ஆறுகள் கால்வாய்களில் உள்ள திடக்கழிவுகளை அகற்றி, அவற்றைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் முகத்துவாரத்தையும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக 7 கோடியே 65 லட்ச ரூபாயை நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.