கொரோனா வைரஸுக்கான முக்கிய தடுப்பு மருந்தான கோவிஷீல்டின் விலையை, சீரம் நிறுவனம் இருமடங்காக உயர்த்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிஷீல்டு தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சர்வதேச தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும் போது, கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைவு என அந்நிறுவனம் கூறியுள்ளது.
உற்பத்திசெய்யப்படும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு அளிக்க சீரம் நிறுவனம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
எஞ்சிய 50 சதவீத தடுப்பூசியை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.