அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாம் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி!

serena williams

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாம் சுற்று போட்டியில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான இப்போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து இருந்தார். இரண்டாம் சுற்றில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கொண்டாவெய்ட் (ANETT KONTAVEIT) உடன் மோதி 7-6, 2- 6, 6-2 என்ற செட் கணக்கில் செரீனா வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை அய்லா டாம்யானோவிச் உடன் செரீனா வில்லியம்ஸ் மோத உள்ளார்.

Exit mobile version