தொடர் வேலைநிறுத்தம் : ஒட்டன்சத்திரம் சந்தையில் ரூ. 2 கோடி வர்த்தகம் பாதிப்பு

அகில இந்திய தொழிலாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படுவதாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் வேதனை தெரிவிகின்றனர். சென்னை, கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தைக்கு அடுத்து மிகப்பெரிய காய்கறி சந்தையாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி மார்க்கெட் திகழ்கிறது.

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் தேனி, கோவை, திருப்பூர் மட்டுமட்டுல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு கொண்டுவரப்பட்டு பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

வேலைநிறுத்தம் காரணமாக, நாளொன்றுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக காய்கறிகள் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version