ஆஸ்திரேலிய அணி இம்மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் 2 ஒரு நாள், 3 டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட் கோஹ்லி திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை தொடருக்கு வீரர்கள் தேர்வு செய்வதில் இந்த தொடர் பெரும் பங்கு வகிக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஓய்விலிருந்த ஜஸ்பிரிட் பும்ரா மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். கே எல் ராகுலுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு இந்த தொடரின் 2 டி20 போட்டியிலும், முதல் 2 ஒருநாள் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 ஒருநாள் போட்டியில் புவனேஷ் குமார் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 அணி:
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா, விஜய் ஷங்கர், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.
முதல் இரண்டு போட்டிகளுக்கான ஒருநாள் அணி:
விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி (விக்கெட்), ஹார்டிக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, முகம்மது ஷமி, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கவுல், கே.எல். ராகுல்.
கடைசி 3 போட்டிக்கான அணி விவரம்:
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி (விக்கெட்), ஹார்டிக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , முகம்மது ஷமி, விஜய் ஷங்கர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட்.
வீரர்களுக்கு ஓய்வு, வாய்ப்பு என சுழற்சி முறையில் அணி தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், உலக கோப்பை அணியை தேர்வு செய்ய, தேர்வாளர்கள் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது.