காஷ்மீரில் உள்ள ராஜோரியில், இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே தொடர் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் ராஜோரி பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தியது. காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில், துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.