கணவன் மீது சின்னத்திரை நடிகை காவல்நிலையத்தில் புகார்

சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து சின்னத்திரை நடிகரான ஈஸ்வரை கைது செய்தனர்..

 

அவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஜெயஶ்ரீக்கும் முதல் கணவருக்கும் பிறந்த பெண் குழந்தை உடன் வசித்து வருகிறார். அந்த பெண் குழந்தை 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்…

காதலித்து இரண்டாவது திருமணம் செய்து ஜெயஸ்ரீயின் 2வது கணவர் ஈஸ்வர் ரகுநாதனுக்கு மது மற்றும் கஞ்சா போதை, சூதாட்டம், தவறான சகவாசம் என பழக்கவழக்கங்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்திருக்கிறது.இந்நிலையில் ஜெயஸ்ரீ சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது கணவர் ஈஸ்வரனுக்கு எதிராக ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் தனது சொத்து ஆவணங்களை திருடி தனக்கு தெரியாமல் அவற்றை வைத்து வெளியில் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்ட போது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்…

மேலும் ஈஸ்வருக்கு பிரபல தொலைக்காட்சி நடிகை மகாலஷ்மியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை ஈஸ்வர் திருமணம் செய்ய முயல்வதாகவும் அதற்கு ஈஸ்வரின் தாய் சந்திராவும் உடந்தையாக இருப்பதாக ஜெயஸ்ரீ அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்…

இது தொடர்பாக அடையாறு மகளிர் காவல்துறை விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வர் ஜெயஸ்ரீயிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும், மேலும் அவரை அடிக்கடி அடித்து உதைப்பதும் தெரியவந்தது. இதற்கு அவரது தாயும் உடந்தை என்பதும் காவல்துறையின் விசாரணையில் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து காவல்துறை 498 ஏ (வரதட்சணைக் கொடுமை), 420 (நம்பிக்கை மோசடி), 506 (1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று தனது பெண்குழந்தையுடன் வந்த ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதனை நேரில் சந்தித்து தனது கணவனுடைய துன்புறுத்தலில் இருந்து தன்னை காப்பாற்ற மனு அளித்தார்…

இதுவரை தன்னிடம் இருந்து 47சவரன் தங்க நகைகள் மற்றும் 30 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பெற்றுக்கொண்டு வாங்கிய சொத்துக்களை அவரது தாயின் பெயர் இருப்பதாகவும் தனது பெயர் இல்லை என்றும் எனவே அதனை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்…

Exit mobile version