பண்டிகைகள் களைகட்ட தொடங்கியுள்ளதால், மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா அல்லது வளைகுடா நாடுகளில் இருந்தாலும், அங்கும் அறியக்கூடிய அளவிற்கு ஓணம் பண்டிகை சர்வதேச விழாவாக மாறி வருவதாக, பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியாக அதிகளவு பொம்மைகள் தயாரிக்கவேண்டுமென கோரிக்கை வைத்த அவர், தமிழகத்தின் தஞ்சாவூர், கர்நாடகத்தின் சென்னப்பட்டனா, ஆந்திராவின் கொண்டப்பள்ளி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தயாரிக்கப்படும் பொம்மைகள், உலகப் புகழ் பெற்றவை எனத் தெரிவித்துள்ளார். டிக்டாக் செயலிக்கு மாற்றாக “கூ” மற்றும் “சிங்காரி” செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.