பிரிந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைகிறார்கள் : முதல்வர்

அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசி செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விதி விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

Exit mobile version