பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்-முதலமைச்சர்

பாலியல் வழக்குகளை விசாரிக்க, தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. இதில், உயர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், புதிய நீதிமன்றத்தை முதலமைச்சர் முன்னிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

Exit mobile version