நீதிமன்ற காவலை விடுவிடுக்கக் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
ரிமாண்டை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் ,வேறு தனியார் மருத்துவமனைக்கு மேற் சிகிச்சைக்காக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 3 தனி தனி மனுக்கள் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்றைய தினமே நீதிபதி உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்வதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.மேலும், அமலாக்கத்துறையின் சார்பில் காவலில் விசாரணை கோரிய மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னரே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படுமா மற்றும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவாரா என்பது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.
ஆனால் தற்போது உயர்நீதிமன்ற முதன்மை அமர்வானது செந்தில்பாலாஜியின் மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post