பதவி ஆசை காரணமாக திமுகவில் சேர்ந்து போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஒருபோதும் வாக்களிக்க போவதில்லை என்று அரவக்குறிச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் சுயநலப் போக்கு காரணமாகவே அரவக் குறிச்சியில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள செந்தில் நாதனை, முந்தைய தேர்தல்களில் சூழ்ச்சி செய்து தோற்கடித்த செந்தில் பாலாஜி, எப்போது எந்தக் கட்சிக்கு தாவுவார் என்பது புரியாத புதிராகவே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். திமுகவில் தஞ்சம் அடைந்துள்ள செந்தில்பாலாஜியை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்றும் அரவக்குறிச்சி மக்கள் தெரிவித்தனர்.