சென்சார் அதிகாரிகளையே அதிர வைத்த "வடசென்னை"

சமீபகாலமாக, திரைப்படங்களில் பொதுவெளியில் பயன்படுத்த முடியாத வார்தைகளை உபயோகித்து வருகிறார்கள். நாளை வெளியாக உள்ள ஒரு திரைப்படம், சென்சார் அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது.

சாதாரணமாக, ஹாலிவுட் திரைப்படங்களில், ஒரு நான்கு எழுத்து வார்த்தையை சகஜமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கலாச்சாரம், தற்போது, இந்திய திரைப்படங்களில் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

தமிழ் திரைப்படங்களில் அது குறைவாக இருந்து வந்தாலும், வெகு சில படங்களில், பீப் ஒலியை தியேட்டரில் கேட்டிருப்போம். ஆனால், அக்டோபர் 17 ம் தேதி ரசிகர்களை சந்திக்க வரும் வடசென்னை திரைப்படம், சென்சார் அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது.

மக்களும் அதிகமான பீப் ஒலியை கேட்க இருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் கூட்டணியில் வரும் இந்த திரைப்படத்தில், பொதுவெளியில் பேச முடியாத நிறைய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்களாம்.

சென்சார் அதிகாரிகள் படத்தை பார்க்கும் போதே, காதை பொத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை கண்டு, சென்சார் அதிகாரிகளே அரண்டு விட்டார்களாம்.

ஏற்கனவே, இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் என்பதால் தான், இந்த நிலை ஏற்பட்டிருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது.

எப்படி இருந்தாலும், சமூக அக்கரை கொண்ட விருது இயக்குனர் மற்றும் நடிகர், இந்த படத்தில் ஒரு மெசேஜ் வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.

Exit mobile version