மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை 39 ஆயிரத்து 543 புள்ளிகளில் முடிவடைந்த பங்குச்சந்தை, இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பரபரப்புடன் வர்த்தகத்தை தொடங்கியது. ஒரு கட்டதில் 39 ஆயிரத்து 765 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் 39 ஆயிரத்து 686 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது முந்தைய நாளை காட்டிலும் 292 புள்ளிகள் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தையிலும் இன்று உயர்வு காணப்பட்டது. நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 865 புள்ளிகளில் நிலை கொண்டது. டாடா ஸ்டீல், எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

கடந்த வாரம், ஜி20 மாநாட்டில் சீன-அமெரிக்க அதிபர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததால் சீன, அமெரிக்க சந்தைகளிலும் உயர்வு காணப்பட்டது.

Exit mobile version