தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குசந்தைகள்

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.

நாடெங்கிலும் ஏழு கட்டங்களில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 23ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பின் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. அதன்படி, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38,888 புள்ளிகளில் துவங்கி 900 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. நிப்டி 11,691 புள்ளிகளுக்கு துவங்கி 284 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 61 காசுகளாக உள்ளது. இந்த ஏற்றத்தினால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version