கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக 300 மரம் அறுக்கும் இயந்திரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்படுள்ள தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. இவற்றை அகற்றுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மரங்களை அப்புறப்படுத்துவதற்காக 300 மரம் அறுக்கும் இயந்திரங்களை, சேலத்திலுள்ள தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் சார்பில், விவசாயிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, வைத்திலிங்கம் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.