கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து துப்புரவு மற்றும் மின்வாரிய பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, திருவள்ளூர், ஆவடி, திருவேற்காடு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மின் வாரிய ஊழியர்களை, திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அனுப்பி வைத்தார்.