ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக் கழகம் முடிவு

பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் பி.இ., பி.டெக்., எம்.இ, எம்.டெக்., மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த தற்போது அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களை வரவழைத்து தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அதிநவீன மென்பொருளைத் தயாரித்து வழங்கும்படி மென்பொருள் நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version