கடந்த ஆண்டை விட இந்தாண்டு பருவமழை குறைவானதால் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி விளங்கிவருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பருவமழை இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு காணப்படுகிறது. மேலும், ஏரியில் உள்ள நீரும் வறண்டுவருவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஏரியில் உள்ள நீரை சேமிக்க கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்