செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்படவில்லை, உபரிநீர் மட்டுமே திறக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருக்கிறார்.
சட்டப்பேரவையில் பேசிய அணைக்கட்டு திமுக உறுப்பினர் நந்தகுமார் பேச்சுக்கு விளக்கம் அளித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு பெய்த கன மழையால் பல ஏரிகள் நிரம்பியதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும் அணைக்கட்டு சட்டமன்ற திமுக உறுப்பினர் நந்தகுமார் தெரிவித்தார்.
உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை என்றும், அங்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டதாகவும் பதிலளித்தார்.
மேலும் பல்வேறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறியதே ஊருக்கும் தண்ணீர் புககாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சென்னையில் 2 மணி நேரம் பெய்த மழைக்கே , சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.