ரூ.49,000 கோடி வரை தமிழக அரசு பயிர்க்கடன் வழங்கியுள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

விவசாயிகளுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு பயிர்க்கடன் வழங்கியுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், விவசாயிகளின் நலனில் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். விவசாயிகளுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு பயிர்க்கடன் வழங்கியுள்ளதாக கூறிய அமைச்சர், அனைத்து துறைகளும் முன்னேற அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version