குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடியிடம், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி செய்தல், அரசு ஆவணத்தை போலியாக தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்ளிட்டவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக்கரை வட்டாட்சியர் மற்றும் ராமேஸ்வரம் வட்டாட்சியர் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரிகளாக செய்யப்பட்டதால், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தேர்வு எழுதிய OMR ஷீட் மற்றும் முக்கிய ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.