கடையநல்லூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்கள் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள் 20 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இனி தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.