5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் 5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழிக அரசு இந்தாண்டு முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அந்த வகையில், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி திருச்சி பெரிய கடை வீதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையுள்ள 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version