நீலகிரி மாவட்டம் சோனூரில் சிவப்பு ரசாயனம் கலந்து விற்பனைக்கு தயாராக வைத்து இருந்த 40 டன் தேயிலை தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் ரசாயன பொருட்கள் தேயிலையில் கலந்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், சிவப்பு ரசாயனம் கலந்த தேயிலையை விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்சாலையில் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் தப்பியோடிய நிலையில், 32 லட்சம் மதிப்பிலான 40 டன் மதிப்புள்ள கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தேயிலை தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.