சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளையான பா.சிதம்பரத்திற்கு ஏழை மக்களின் நிலை குறித்து அறிய வாய்ப்பில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்குப் பின்னர் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என கூறினார். சீமான் வீட்டு செல்லப்பிள்ளையான ப. சிதம்பரத்திற்கு ஏழைகளின் நிலை என்ன என்பது தெரியாது என்றும், அதனால் தான் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் தமிழக அரசு வழங்கும் சிறப்பு நிதியை விமர்சிப்பதாக குற்றம்சாட்டினார். கொடுக்கின்ற எண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.