இணையத்தில் பிரபலமாகி வரும் ஃபேஸ் செயலியினால் தங்கள் நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஃபேஸ் செயலி சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் காட்டுவதால் பலரும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான இந்த செயலியைப் பயன்படுத்துவதால் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க செனட் மைனாரிட்டி தலைவர் சக் ஸ்குமர் தெரிவித்துள்ளார். மேலும் தனிநபர்களின் தகவல்களும் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்.