குடியரசு தலைவர் தமிழக வருகையொட்டி கடலோர பகுதிகளில் பாதுகாப்பு

குடியரசு தலைவரின் காஞ்சிபுரம் வருகையை ஒட்டி தமிழக கடலோர பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ரக் ஷா கிரீன் ஒத்திகை நடத்தப்பட்டது.

கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் 16ம் தேதி வரை இந்த ஒத்திகையை நடத்துகின்றனர். நிகழ்ச்சியை வருகிற 16ம் தேதி வரை நடத்துகின்றனர். கடலோர பகுதிகளில் அந்நியர் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 கடலோர கிராம கடற் பகுதிகள் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் பின்புறமுள்ள கடற்பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

Exit mobile version