நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாப்பட உள்ள நிலையில், சென்னையில் சுமார் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால், சென்னை முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் 15 இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு, காவல்துறையிடம் இந்து அமைப்பினர் முறைப்படி அனுமதி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு, சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறுவதற்கு, ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்படுவதால், எளிதாக அனுமதி கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை வரை 2 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளையில், விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். சிலைகளை வைப்பதற்கு காவல் துறை சார்பில் 19 விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அசம்பாவிதங்களை தடுக்க சென்னை முழுவதும் சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post