10th பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்!!

கொரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்றும், எனவே தேர்வுக்கு தடைவிதிக்காமல், அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளித்து, மாணவர்கள் மாஸ்க் அணிந்து வருவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வை தள்ளி வைக்க முடியுமா என பரிசீலிக்க வேண்டும் என்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version