மோடியின் மதுரை வருகையொட்டி பாதுகாப்பு பணி தீவிரம்

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 27ம் தேதி
நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் நடராஜன், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் தோப்பூரிலும், பாரதிய ஜனதா மாநாடு நடைபெறும் ரிங் ரோட்டிலும் ஆய்வு செய்தனர். விமான நிலையம், மோடி செல்லும் வழித்தடம் ஆகியவற்றையும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Exit mobile version