73வது சுதந்திர தின விழா 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையம், மருத்துவமனை, கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.