இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக நேற்று 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
மாலை 5 மணிக்கு பிறகு தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் இல்லை என்பதை காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், 5 கிலோ மீட்டர் சுற்றியுள்ள இடங்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்வதோ, எடுத்து செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post