இரண்டாவது மிக உயரமான பாலம் ஜெர்மனியில் திறப்பு

ஜெர்மனியின் இரண்டாவது மிக உயரமான பாலம் ஒன்று பல எதிர்பார்ப்புகளை தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

Hochmoselbrucke அல்லது High Mosel என்று இந்த பாலத்தை அழைப்பார்கள். இந்த பாலம் சுமார் 1.7 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதற்கு அருகில் Mosel என்ற நதி ஒன்று இருக்கிறது. அதிலிருந்து 524 அடி உயரத்தில் இந்த பாலம் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு இந்த பாலம் வழியாக 25 ஆயிரம் வாகனங்கள் கடந்து பயணம் செய்கிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பாலமானது, Eifel என்ற இடத்தையும் Hunsruck என்கிற இடத்தையும் நேரடியாக இணைகின்றது.

நேற்று நீண்ட நாட்கள் போரட்டத்திற்கு பிறகு ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இந்த பாலத்தை உற்சாகமாக திறந்து வைத்து உள்ளனர்.

மேலும், அங்கு வசிக்கும் சிலர் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் நிலத்தடி நீர் மாசுப்படலாம் எனவும், அருகில் இருக்கும் பெரிய திராட்சை தோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என போராடி வந்தனர். இப்படி பல இன்னல்களை தாண்டி இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கிவுள்ளனர். இரண்டாவது மிக உயரமான high mosel பாலத்தின் பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version