அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல்

அண்ணா திமுகவின் அமைப்பு ரீதியான பொறுப்புகளுக்கு 2-ம் கட்ட தேர்தல், அமைப்பு ரீதியாக 40 மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 6 பேரூராட்சி, 22 ஒன்றியங்களில் உள்ள கழக பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் கே.ஆர்.மஹாலில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம் ஆகியோரிடம் மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்களிடம் விருப்ப மனுக்களை வழங்கினர்.

 

வடசென்னை தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட பொறுப்புகளுக்கு அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது. சென்னை ராயபுரத்தில் நடைபெற்று வரும் அமைப்புத் தேர்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு, விருப்ப மனுக்களை தொண்டர்களுக்கு வழங்கினார். நிகழ்வில் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக, அதிமுக அமைப்பு தேர்தல் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை மற்றும் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை கழக தொண்டர்கள் ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.

தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் இணைந்து விண்ணப்ப படிவங்களை கழக நிர்வாகிகளுக்கு வழங்கினர்.

 

Exit mobile version