நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்- 2 விண்கலம், ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சந்திராயன் 1 ஏவப்பட்டு 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் சந்திராயன்-2 விண்கலம் இரண்டாம் கட்டமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவில் தரையிங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி. எம்கே-3 மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது. பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல 45 முதல் 50 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றும், நிலவில் இருந்து மண் உள்ளிட்டவைகளை சேகரிப்பதுடன் அவற்றின் புகைப்படங்களையும் அனுப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.