சந்திரயான்-3 திட்டத்தை 2020 நவம்பரில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு

சந்திரயான்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. இதனால் திட்டமிட்டபடி அதன் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. சந்திரயான்-2 விண்ணில் ஏவியதில் இருந்து அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கலால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், சந்திரயான்-3-ன் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்பட்டு வருவதால் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

சந்திரயான்-3-ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைக்க உள்ளனர். 

Exit mobile version